இந்தியா

பண்ணைப் பள்ளியில் செயல்விளக்கம்

Added : ஜன 16, 2020
Advertisement

காட்டேரிக்குப்பம் : காட்டேரிக்குப்பம் பண்ணைத் தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில், சம்பா நெல் பருவத்திற்கான பண்ணை பள்ளி நிகழ்ச்சி நடந்தது.

காட்டேரிக்குப்பம் வேளாண் அலுவலர் வெங்கடாசலம் வரவேற்றார். காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் உழவியல் வல்லுனர் ரவி, நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, தொழிநுட்பங்களை விளக்கினார்.துணை வேளாண் இயக்குனர் சிவசுப்ரமணியன், கரைசல் தயாரிக்கும் முறைகள், அவற்றின் முக்கியத்துவம் குறித்து செயல்விளக்கம் அளித்தார். இப்பயிற்சியில், 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். விவசாயிகளுக்கு பூச்சிவிரட்டி விளக்கு பொறி மற்றும் இடுபொருள்கள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் கண்ணாயிரம், கிராம விரிவாக்க பணியாளர்கள் நாராயணசாமி, குமரன், குணசேகரன் மற்றும் செயல் விளக்க உதவியாளர் சவுந்தரராஜன் ஆகியோர் செய்திருந்தனர். வேளாண் தொழில்நுட்ப மேலாளர் ஜெயசந்திரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X