இந்தியா

ரூ.5 கோடியில் நீச்சல் குளம் கட்டுமானப் பணியில் மந்தம்

Added : ஜன 16, 2020
Advertisement

புதுச்சேரி : சாராதாம்பாள் நகரில் ரூ. 5 கோடி மதிப்பில் கட்டப்படும் நீச்சல் குளம் கட்டுமானப் பணி, ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

புதுச்சேரியில் நீச்சல் பயிற்சி பெறவும், நீச்சல் போட்டிகள் நடத்தவும் ஏதுவாக, அரசு சார்பில் நீச்சல் குளங்கள் கிடையாது. தனியார் நீச்சல் குளங்களில் தான், பயிற்சி மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், மத்திய அரசின் 'கேலோ இந்தியா' திட்டத்தின் கீழ், புதிய நீச்சல் குளம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு, மத்திய விளையாட்டு அமைச்சகமும் ஒப்புதல் அளித்து, ரூ. 5 கோடியை புதுச்சேரி அரசுக்கு வழங்கியது.அதையடுத்து, சாரதாம்பாள் நகரில் நீச்சல் குளம் கட்டும் பணி, கடந்த 2018 ம் ஆண்டு ஜூலை மாதம் துவங்கியது.

ஒலிம்பிக் போட்டி நடத்தும் தரத்தில், 50 மீட்டர் நீளம், 25 மீட்டர் அகலம், 1.75 மீட்டர் ஆழத்துடன், நீச்சல் குளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளத்தின் வடிகட்டி அறை, ஆண்கள், பெண்கள் உடை மாற்றுவற்கு 16 அறைகள், பொருள் பாதுகாப்பு அறைகள் கட்டப்பட உள்ளது. கட்டுமான பணியை, 15 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டது.ஆனால் அவகாசம் முடிந்தும், நீச்சல் குளம் கட்டி முடிக்கப்படவில்லை. கட்டுமான பணிக்கு ஆட்கள் தட்டுப்பாடு, மழை போன்ற காரணங்களால் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை என கட்டுமான நிறுவனத்தினர் கூறுகின்றனர்.பணிகளை விரைவாக முடித்து, பயன்பாட்டிற்கு நீச்சல் குளத்தை கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X