இந்தியா

தெருவில் திரியும் பன்றிகள் கலெக்டர் அதிரடி உத்தரவு

Added : ஜன 16, 2020
Advertisement

காரைக்கால் : காரைக்கால் பகுதியில் பொது இடங்களில் திரியும் பன்றிகளை பிடித்து அகற்ற கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

காரைக்கால் மாவட்டத்தில் பல பகுதிகளில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. இவை, தோட்ட பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. சாலைகளில் திரியும் பன்றிகளால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். பொது இடங்களில் திரியும் பன்றிகளால் சுகாதார கேடும் ஏற்பட்டு வருகிறது.எனவே, சுற்றி திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் பன்றி வளர்ப்போரை கண்டறிந்து, நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்துகள் பதிவு செய்ய வேண்டும் என, மாவட்ட கலெக்டர் ஆதர்ஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், காரைக்கால் மாவட்டத்தில் பன்றி வளர்ப்போர் கண்டறியப்பட வேண்டும். அவர்களை காரைக்கால் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகள் பதிவு செய்ய வேண்டும். அவர்களுடைய இருப்பிடத்தில் சுகாதாரமான முறையில் பன்றிகள் வளர்க்கப்படுகிறதா என உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறாக பன்றிகள் திரிந்தால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும்.தெருக்களில் பன்றிகளை திரிய விடுவதை தடுக்க நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளுடன் இணைந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது சுகாதாரம் கருதி, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X