இந்தியா

காய்கறி தோட்டம் அமைக்க மகளிருக்கு பயிற்சி முகாம்

Added : ஜன 16, 2020
Advertisement

பாகூர் : கிருமாம்பாக்கம் அடுத்த புதுக்குப்பத்தை சேர்ந்த மகளிர் குழுவிற்கு, வீட்டு தோட்டத்தில், வீட்டு உபயோக நீரை பயன்படுத்தி, காய்கறி பயிர் செய்வது பற்றிய செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.


வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், கன்னியகோயில் உழவர் உதவியக வேளாண் அலுவலர் வளர்மதி வாசுதேவன் வரவேற்றார்.வீட்டு உபயோக நீரை பயன்படுத்தி தோட்டத்தில் காய்கறி பயிரிடும் முறை, அதனால் ஏற்படும் நன்மைகள், பயிரிடுதல் தொழில்நுட்பங்கள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.பயிற்சியில் பங்கேற்ற மகளிருக்கு, காய்கறி செடிகளை வளர்ப்பதற்கு தேவையான விதைகள் மற்றும் இடுபொருட்கள் இலவசமாக வழங்கப் பட்டது.

ஏற்பாடுகளை கிராம விரிவாக்க பணியாளர்கள் பாஸ்கரன், நாராயணசாமி, அரிகரன் ஆகியோர் செய்திருந்தனர். ஆறுமுகம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X