இந்தியா

மாடுகளுக்கான அலங்கார பொருட்கள்

Added : ஜன 16, 2020
Advertisement

கண்டமங்கலம் : மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, மதகடிப்பட்டில் நேற்று நடந்த சிறப்பு சந்தையில், மாடுகளை அலங்கரிக்கும் பொருட்கள் விற்பனை களைகட்டியது.பொங்கல் பண்டிகையையொட்டி, மதகடிப்பட்டில் நேற்று சிறப்பு சந்தை நடந்தது.

சந்தையில் காய்கறி உள்ளிட்ட வழக்கமான பொருட்களுடன்,மாடுகளுக்கான கயிறு வகைகள், பல ரகங்களில் பல வண்ணங்களில், விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தது.மாடுகளை அலங்கரிக்கும் மணி, வெண்டையம், தண்டை, சலங்கை, கொப்பி, பித்தளை கொப்பி, முருக்காத்தி, செயின், கொம்புக் கயிறு, கழுத்துக் கயிறு, மூக்கணாங்கயிறு, மோகரை, சாட்டை உள்ளிட்ட பொருட்கள் பல்வேறு ரகங்களில் விற்பனை செய்யப்பட்டது.கயிறு ரகங்கள் குறைந்தது 40 ரூபாய் முதல் அதிகபட்சம் 1000 ரூபாய் வரையும், மாடுகளுக்கான ஆபரணங்கள் 8.00 ரூபாய் முதல் 300 ரூபாய் வரையும் விற்கப்பட்டது.

மாடு வளர்ப்போர், கயிறு மற்றும் அலங்கார பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். சந்தையில் காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மக்கள் கூட்டம் அலைமோதியதால், விற்பனை களைகட்டியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X