கன்னியக்கோவிலில் சமத்துவப் பொங்கல் | Dinamalar

இந்தியா

கன்னியக்கோவிலில் சமத்துவப் பொங்கல்

Added : ஜன 16, 2020
Share

பாகூர் : கன்னியக்கோவில் மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழியம்மன் கோவில் திடலில், முத்தாலம்மன் அறக்கட்டளை சார்பில், 4ம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது.விழாவிற்கு, தனவேலு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.

அறக்கட்டளை தலைவர் அசோக் ஷிண்டே முன்னிலை வகித்தார். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த இந்து, முஸ்லிம் பெண்கள், புது பானையில் பொங்கலிட்டு, சூரிய பகவானை வழிபட்டனர்.பாகூர் கரிகால் சோழன் சிலம்பாட்ட குழுவினரின் சிலம்ப நிகழ்ச்சி, வில்லியனுார் ஸ்ரீ வஜ்ஜிரதேகா விளையாட்டு பயிற்சி மையத்தினரின், மல்லர் கம்பம் செயல்முறை விளக்கம் நடந்தது.

பெண்கள், இளைஞர்கள், சிறுவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. விழாவில், அறங்காவலர் குழு நிர்வாகிகள் தனசேகரன், கலியபெருமாள், செந்தில்குமார், ஜீவகணேஷ், கனகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X