இந்தியா

முத்துரத்தின அரங்கம் பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

Added : ஜன 16, 2020
Advertisement

புதுச்சேரி : கவுண்டன்பாளையம் முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு, பள்ளி தாளாளர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.

புலவர் நாகி, புதுப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சீனுமோகன் தாஸ், பொதுப்பணி துறை உதவி பொறியாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.புதுச்சேரி மாநில ஒருங்கிணைந்த கராத்தே சங்க இணைச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் வாழ்த்தி பேசினார். மாணவர்கள் புதுப்பானையில் பொங்கலிட்டு, விழாவை கொண்டாடினர்.

ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் கவிதா, மூத்த அலுவலக அதிகாரி மரியஸ்டெல்லா, சமுதாய நலப்பணி திட்ட ஆசிரியர் முகிலரசி, என்.எஸ்.எஸ்., திட்ட ஆசிரியர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X