செட்டிப்பட்டு வரதராஜப் பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்| Dinamalar

இந்தியா

செட்டிப்பட்டு வரதராஜப் பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

Added : ஜன 16, 2020
Share

திருக்கனுார் : செட்டிப்பட்டு வரதராஜப் பெருமாள் கோவிலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நேற்று நடந்தது.திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது.திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு பஜனைக் குழுவினர் வீதியுலா நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X