இந்தியா

துப்புரவு பெண் தொழிலாளர்களுடன் கவர்னர் கிரண்பேடி நடனம்

Added : ஜன 16, 2020
Advertisement
 துப்புரவு பெண் தொழிலாளர்களுடன் கவர்னர் கிரண்பேடி நடனம்

புதுச்சேரி : கவர்னர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவில், துப்புரவு பெண் ஊழியர், நடனம் ஆடும் வீடியோவை, கவர்னர் கிரண்பேடி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் பொங்கல் விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராஜ்நிவாசில், கவர்னர் கிரண்பேடி, துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்களுடன் இணைந்து, பொங்கல் விழாவைக் கொண்டாடினார். இவ்விழாவில், 1,500 பெண் தொழிலாளர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு பரிசுப் பொருள்களை கவர்னர் வழங்கினார்.விழாவில், மூதாட்டி ஒருவர், நடிகர் தனுஷ் நடித்த 'ரவுடி பேபி' பாடலுக்கு நடனம் ஆடி, அசத்தினார். கவர்னர் கிரண்பேடியும் கைதட்டி, அவரை உற்சாகப்படுத்தினார்.இந்த நடனத்தை மொபைல்போனில் வீடியோவாக பதிவு செய்து, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X