இந்தியா

வில்லியனுாரில் பொங்கல் விழா தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து

Added : ஜன 16, 2020
Advertisement

வில்லியனுார் : வில்லியனுாரில் நடந்த பொங்கல் விழாவில் ஏற்பட்ட மோதலில், ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் எதிரே உள்ள ஆரணி வீதியில், என்.ஆர்.காங்., பிரமுகர் ஆசைமணி தலைமையில், நேற்று காலை 11;00 மணியளவில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.விழாவில் பங்கேற்ற விருந்தினருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த டீக்கடைக்காரர் குணா மகன் செல்வம், 27,என்பவர், சிறப்பு விருந்தினர்கள் குறித்து கிண்டல் செய்துள்ளார்.இதனால் தகராறு ஏற்பட்டது.

அதை தொடர்ந்து, மாலையில், ஆரணி வீதியில் நடந்து சென்ற செல்வத்தை, ஆசைமணியின் ஆதரவாளரான, வேல்ராம்பட்டை சேர்ந்த விமல்நாத் உள்ளிட்ட சிலர் வழிமறித்து, வயிற்று பகுதியில் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். நிலைகுலைந்து கீழே விழுந்து கிடந்த செல்வத்தை, அங்கிருந்தவர்கள் மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X