இந்தியா

வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரியில் கல்லீரல் புற்றுநோய் கட்டி அகற்றி சாதனை

Added : ஜன 16, 2020
Advertisement

வில்லியனுார் : அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், முதியவருக்கு கல்லீரல் புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.

கடலுார் மாவட்டத்தை சேர்ந்த 50 வயது நபர், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். புதுச்சேரி, அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த அவருக்கு, பரிசோதனை செய்த டாக்டர்கள், கல்லீரல் புற்றுநோய் இருப்பதை கண்டறிந்தனர்.அதையடுத்து, புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் ரவிசங்கர், பொது அறுவை சிகிச்சை பேராசிரியர்கள் சிவராஜன், தீபு, செல்வகுமார், மயக்க மருந்து துறை நிபுணர்கள் ரகுராமன், ராதாகிருஷ்ணன், ஐஸ்வர்யராஜன், குணசீலன், மது, ஆர்த்தி உள்ளிட்ட மருத்துவ குழுவினர், 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, முதியவரின் கல்லீரலில் இருந்த, பெரிய கட்டியை அகற்றினர்.

நோயாளி மருத்துவ வார்டில் கண்காணிக்கப்பட்டு, பூரண குணமடைந்தபின் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.முதல் முறையாக இந்த மருத்துவமனையில், கல்லீரல் புற்றுநோய் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவ குழுவினரை கல்லுாரி சேர்மன் ராமச்சந்திரன், இயக்குனர் மகாதேவன், முதல்வர் ரத்தினசாமி உள்ளிட்டோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X