மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து

Added : ஜன 16, 2020
Advertisement
 மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து

கோவை:மாநில அளவில் நடந்த, பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டியில், கே.கே.நாயுடு பள்ளி அணியும்; மாணவிகள் பிரிவில், அல்வேர்னியா பள்ளி அணியும் முதலிடத்தை தட்டி சென்றன.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் சார்பில், குடியரசு தின குழுப்போட்டிகள், மதுரை மாவட்டத்தில், செயின்ட் மேரிஸ் பள்ளியில் நடந்தது.17 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான, கபடி, கூடைப்பந்து, கோ- கோ, வாலிபால், த்ரோபால் என, 17 வகையான விளையாட்டு போட்டிகளில், 400க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

கோவை மாவட்டத்தின் சார்பில், ஸ்ரீகே.கே.நாயுடு மேல்நிலைப்பள்ளி அணி, மாணவிகள் பிரிவில் அல்வேர்னியா பள்ளி அணிகள் பங்கேற்றன.மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில், ஸ்ரீகே.கே.நாயுடு பள்ளி அணி, 79-68 என்ற புள்ளி கணக்கில், திருநெல்வேலி எஸ்.டி.ஏ.டி., அணியையும்; மாணவிகளுக்கான இறுதிப்போட்டியில், அல்வேர்னியா பள்ளி அணி, 62-43 என்ற புள்ளி கணக்கில், திருவண்ணாமலை எஸ்.டி.ஏ.டி., பள்ளி அணியையும் வென்றனர்.போட்டியின் முடிவில், ஸ்ரீகே.கே.நாயுடு பள்ளி அணி, அல்வேர்னியா பள்ளி அணிகள் முதலிடம் பிடித்தன. வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பைகள், சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X