முடிந்தது வர்த்தக போர்:அமெரிக்கா-சீனா இடையே ஒப்பந்தம் கையெழுத்து

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (8)
Advertisement
முடிந்தது வர்த்தக போர்:அமெரிக்கா-சீனா இடையே ஒப்பந்தம் கையெழுத்து

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன்: வர்த்தக போரை நடத்தி வந்த அமெரிக்கா - சீன நாடுகள் தற்போது பரஸ்பரம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வர்த்தக போரை முடிவுக்குகொண்டு வந்துள்ளன.

சீனாவுக்கும் , அமெரிக்காவுக்கும் இடையே இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக வர்த்தக மோதல் நடந்து வந்தது. கடந்தாண்டு ஜூனில் ஜப்பானின் ஒசாகாவில் நடந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஷி ஜிங்பிங் இடையிலான சந்திப்பின் போது, சீன பொருட்களுக்கு புதிதாக வரி விதிப்பதை நிறுத்தி வைக்க அமெரிக்கா ஒப்பு கொண்டன. இதையடுத்து இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொள்வதென முடிவு செய்தன.




இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான முதற்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது. தலைநகர் வாஷிங்டனில் சீனாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்த இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் - சீன துணை பிரதமர் லீயு ஹி ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர்.

இதன் மூலம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் வர்த்தக போரை நடத்தி வந்த அமெரிக்க- சீன நாடுகள் இன்று முதற்கட்ட ஒப்பந்தம் ஏற்படுத்தி வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளன. இதையடுத்து இரு நாடுகளுக்கிடையே புதிய நட்பு மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
16-ஜன-202015:50:22 IST Report Abuse
Nallavan Nallavan இனி கொஞ்ச நாளைக்காவது இந்திய பங்கு வர்த்தகம் ஓரளவு நல்ல நிலையில் இருக்கும் .....
Rate this:
Share this comment
Cancel
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
16-ஜன-202013:37:38 IST Report Abuse
தஞ்சை மன்னர் இப்போதைக்கு ஈரான் ஆதரவு வல்லரசு நாடு சீனா தற்போதைக்கு அதை தாக்குதல் நடக்கும்போது சீனா தொந்திரவு தரக்கூடாது என்று பணத்தால் அடிக்க டிரம்ப் காய் நகர்தல் ஆனால் சீனா இங்கிட்டு வாங்கி அங்கிட்டு கொடுக்க அது முயலும் எல்லா நாட்டிலும் ஈரான் உடன் தொடர்பு உடைய இரும்பு தொழில் செய்யும் சீனா வின் பெரிய கம்பெனி வர்த்தக தொடர்பை, நிதி தொடர்பானை நடவடிக்கை களை கண்கணிக்கவும் அமெரிக்கா உத்திரவு கொடுத்து உள்ளது அது சீனா வுக்கு பெரிய பாதிப்பை கொடுக்கும் எனவேதான் தற்போது இறங்கி வந்து உள்ளது
Rate this:
Share this comment
Cancel
HARI - pune,இந்தியா
16-ஜன-202011:39:35 IST Report Abuse
HARI வெல்லகாரனும், சப்ப மூக்கனும் ஒண்ணா சேர்ந்துட்டான் .... அவனுங்க சும்மாவே ஆடுவானுங்க, இப்ப வேற ஒன்னு சேர்ந்துட்டானுங்க, இன்னும் என்னென்ன கூத்து நடக்கபோவுதோ ஆண்டவா ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X