சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நோகாமல் நோம்பி கொண்டாடுறாங்களே!

Added : ஜன 16, 2020
Advertisement
 நோகாமல் நோம்பி கொண்டாடுறாங்களே!

பேரூர்:பண்டிகை காலங்கள் என்றாலே, ஜவுளி, மொபைல்போன், நகைக்கடைகள் உள்ளிட்ட நிறுவனங்கள், சிறப்பு சலுகைகளை அறிவித்து கிறங்கடிப்பார்கள். இதனால், வாடிக்கையாளர்கள் பண்டிகை காலங்களை எதிர்ப்பார்த்திருப்பர்.

அது போன்ற சமயத்தில், நோகாமல் நோம்பி கும்பிட நினைக்கும், சில மோசடி பேர்வழிகள் தங்கள் வேலையை காட்டுகின்றனர். பண்டிகை காலங்களில், ஆன்லைன் வாயிலாக பொருட்கள் வாங்குவோரைகுறிவைத்து, மோசடியை அரங்கேற்றுகின்றனர்.

இந்த மோசடியை பாருங்க!

காருண்யா நகரை சேர்ந்த ஒருவருக்கு, பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் பெயரில் பரிசு கூப்பன் தபாலில் வந்துள்ளது. அதில், 11 லட்சம் ரூபாய் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்னர், அவரது மொபைல் போனில் தொடர்பு கொண்ட ஒருவர்,பிரபல வங்கி கணக்கு எண்ணை எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பியுள்ளார். பரிசு பணத்தை பெற, அந்த வங்கி கணக்கில்,ரூ.1.10 லட்சம் செலுத்துமாறு கூறியுள்ளார். நல்லவேளை, நண்பர்கள் அறிவுரையால் பணம் செலுத்தாமல் தப்பினார்.

அவர் கூறுகையில், 'தொழில் நிமித்தமாக பிரபல ஆன்லைன் நிறுவனங்களில் பொருட்கள் வாங்குவது வழக்கம். அந்நிறுவனங்களிடம் கொடுத்த முகவரி மற்றும் மொபைல் போன் எண்ணுக்கு, மோசடி நபர்கள் தொடர்ந்து தொடர்பு கொள்கின்றனர். தீபாவளி சமயத்தில், வெளிநாட்டு கார் பரிசு விழுந்துள்ளதாக அழைத்தனர்.தற்போது, ரூ.11 லட்சம் விழுந்துள்ளதாக அழைக்கின்றனர்.நண்பர்கள் எச்சரித்ததால் தப்பினேன்' என்றார்.

இது சாப்பாட்டு மோசடி!

பேரூர் அருகே, ஒரு ஓட்டல் உரிமையாளரை போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், 3 ஆயிரம் ரூபாய்க்கு உணவு ஆர்டர் கொடுத்துள்ளார். பணத்தை வங்கியில் செலுத்துவதாக கூறி, வங்கி கணக்கு எண்ணையும் பெற்றுள்ளார்.பின்னர், வங்கியில் பணத்தை செலுத்த முடியவில்லை என கூறி, டெபிட் கார்டு எண்ணை பெற்றுள்ளார். உரிமையாளருக்கு வந்த ஓ.டி.பி., எண்ணையும் பெற்று, கணக்கில் இருந்து மூன்று முறை பணத்தை சுரண்டியுள்ளார்.

இதுபோன்று, பிரபல துணிக்கடைகளின் பெயரை கூறி, 'உங்கள் மொபைல் எண் லக்கி நம்பராக தேர்வாகியுள்ளது. குடும்பத்துடன் கோவா, மலேசியா, சிங்கப்பூர் அழைத்து செல்கிறோம்' என கூறி, மோசடி செய்கின்றனர்.விழாக்காலங்களில் பரிசு, இலவசத்துக்கு ஆசைப்படாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே, போலீசாரின் அறிவுரை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X