பொது செய்தி

தமிழ்நாடு

'குப்பையில் இருந்து உரம்' திட்டத்தை கைவிடக்கூடாது: மாநகராட்சிக்கு சி.எம்.ஏ., கறார் உத்தரவு

Added : ஜன 16, 2020
Advertisement

கோவை:'குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் மையம் கட்டும் பணியை, எக்காரணம் கொண்டும் கைவிடக் கூடாது' என, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் (சி.எம்.ஏ.,) பாஸ்கரன் அறிவுறுத்தியுள்ளார்.

கோவை நகர் பகுதியில் தினமும் உருவாகும், 850 டன் குப்பை, வெள்ளலுார் கிடங்கில் கொட்டப் படுகிறது.இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு பிரச்னைக்கு தீர்வு காண, அந்தந்த பகுதியிலேயே குப்பையை அழிக்க, வார்டு அளவில், 69 இடங்களில் இயற்கை உரம் தயாரிக்க மாநகராட்சி முடிவு செய்தது.

ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை, கவுண்டம்பாளையம் பழைய குப்பை கிடங்கு, போத்தனுார் உட்பட ஆறு இடங்களில் மட்டும் இதற்கான பணி முழுமையாக முடிக்கப்பட்டு, மக்கும் குப்பையை துகளாக்கி, உரமாக்கும் பணி துவக்கப்பட்டது.இங்கு பொருத்தப்பட்ட இயந்திரங்கள், போதிய திறனில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 'பெல்ட்' அடிக்கடி அறுந்து விடுகிறது; எதிர்பார்த்தபடி மையத்தை செயல்படுத்த முடிவதில்லை. இதனால், கவுண்டம்பாளையத்தை தவிர, மற்ற இடங்களில், மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கும் பணி முடங்கியுள்ளது.


ஈரோட்டில் மட்டும் வெற்றி

ஈரோடு மாநகராட்சியில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டம் வெற்றிகரமாக செயல் படுத்தப்படுகிறது. உரம் தயாரிக்கும் இயந்திரம் சிறப்பாக செயல்படுவதை அறிந்த மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார், துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி மற்றும் பொறியியல் பிரிவு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.அங்கு பயன்பாட்டில் இருப்பதைபோல், முதல்கட்டமாக, ஆறு மையங்களுக்கு அதிக திறனுள்ள இயந்திரங்கள் வாங்கிக்கொடுக்க, கமிஷனர் உறுதியளித்துள்ளார்.


சுகாதாரப்பிரிவில் ஆர்வமில்லை

இதில், 16 இடங்களில் மையம் அமைக்க, மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது; சில இடங்களுக்கு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 20 இடங்களுக்கு மறுடெண்டர் கோர வேண்டி இருக்கிறது. இம்மையம் கட்டுவதற்கு அரசியல் ரீதியாகவும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. குப்பையில் உரம் தயாரிக்க, சுகாதாரப் பிரிவினரும் ஆர்வம் காட்டுவதில்லை.'தரமான இயந்திரம் பொருத்தி, குறிப்பிட்ட நாட்களுக்குள் மையம் கட்டித்தருவதில்லை' என, சுகாதாரப் பிரிவினரும், 'வீடு வீடாகச் சென்று குப்பையை தரம் பிரித்து, சுகாதாரப் பிரிவினர் சேகரிப்பதில்லை' என, பொறியியல் பிரிவினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொள்கின்றனர்.

அதனால், 36 இடங்களில் மையம் கட்டுவதை கைவிட, மாநகராட்சி திட்டமிட்டது.'திட்டத்தை கைவிடக்கூடாது'இது தொடர்பாக, 'ஸ்மார்ட் சிட்டி' இயக்குனரவை கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டது; அதை, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஏற்கவில்லை.வெள்ளலுார் குப்பை கிடங்கு பிரச்னைக்கு தீர்வு காண, பசுமை தீர்ப்பாயத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே அதை கைவிடாமல், உர மையம் கட்ட வேண்டிய அவசியத்தை, சுகாதார ஆய்வாளர்களிடம் தெரிவித்து, செயல்படுத்த கட்டாயப்படுத்துமாறு அவர் அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X