அதிசயிக்க வைத்த மிராக்கிள் அணி! | Dinamalar

அதிசயிக்க வைத்த மிராக்கிள் அணி!

Added : ஜன 16, 2020

கோவை:பொள்ளாச்சி, நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி மைதானத்தில் நடந்த, லீக் கிரிக்கெட் போட்டியில், மிராக்கிள் அணி, 29 ரன்கள் வித்தியாசத்தில், என்.ஐ. ஏ., அணியை வீழ்த்தியது.

மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவில், கிளப்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. மூன்றாவது டிவிஷனுக்கான போட்டி, பொள்ளாசசி, நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி மைதானத்தில் நடந்தது.

மிராக்கிள் மற்றும் என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்கள் அணி மோதிய போட்டியில், முதலில் 'பேட்' செய்த, மிராக்கிள் அணி, 46.3 ஓவரில், அனைத்து விக்கெட்களையும் இழந்து, 231 ரன்கள் அடித்தது.இந்த அணியின் சம்பத்குமார், அதிகபட்சமாக, 60 ரன்களும், ராஜேஷ், 30 ரன்களும் அடித்தனர். என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்கள் அணி சார்பில், அசோக்குமார், 4 விக்கெட் வீழ்த்தினார்.

சேஸ் செய்த, என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்கள் அணி, 39.5 ஓவர்களில், 202 ரன்களுக்கு, அனைத்து விக்கெட்களையும் இழந்து, 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.அணியின் வெற்றிக்காக போராடிய அசோக்குமார், அதிகபட்சமாக, 93 ரன்கள் அடித்தார். மிராக்கிள் அணியின் ராஜேஷ், 47 ரன்கள் விட்டுக்கொடுத்து, 6 விக்கெட் வீழ்த்தி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இவர், 30 ரன்கள் அடித்து, ஆட்ட நாயகனாகவும் ஜொலித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X