தமிழ்நாடு

கவனியுங்களேன் ண அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் திணறும் மக்கள் ண சாலை ஆக்கிரமிப்பிற்கு வர வேண்டும் கடுமையான சட்டம்

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020
Advertisement

விருதுநகர், மாவட்டத்தில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான சட்டம் வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.மாவட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை கூடுவது போல், சாலை ஆக்கிரமிப்புகளும் பெருகி வருகிறது. இதனால் ரோடுகள் குறுகி பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விருதுநகரில் மெயின் பஜாரில் துவங்கி தெப்பம் வரை போக்குவரத்து நெரிசல் கடுமையாகயுள்ளது. அதே போல மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, ராஜபாளையம், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளின் மெயின் பஜார்களிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகியுள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக விளங்குவது ஆக்கிரமிப்பு கடைகள் தான். இதனால் பொதுமக்களுக்கு காலவிரயம் ஏற்படுவதுடன், வாகன இரைச்சலால் இதய பாதிப்பும், மன அழுத்தமும் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற இதுவரை மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததில்லை. இப்பகுதிகளில் வாகன ஓட்டிகள் முறையாக விதிகளை பின்பற்றாததால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகங்களும் முறையாக மெயின் பஜார்களை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில்லை. இந்த மெத்தனபோக்கால் பொதுமக்களும் வாகனங்களை வழிமறித்து ரோட்டோரம் நிறுத்துகின்றனர். இதுவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாகிறது. போக்குவரத்து நெரிசல் மீதான சட்ட விதிகளை கடுமையாக்க வேண்டும். ஆக்கிரமிப்பு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலை ஆக்கிரமிப்பே காரணம்மாவட்டத்தில் உள்ள அனைத்து மெயின் பஜார்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாகிறது. சாலை ஆக்கிரமிப்புமே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம். வாகனம் செல்வது போல் பாதசாரிகள் நடப்பதற்கும் முன்னுரிமை தர வேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கான காரணங்களை ஆராய்ந்து அதற்கேற்ற தண்டனையும், அபராதமும் விதித்தால் மட்டுமே நகர்பகுதிகளில் வாகன நெரிசலை குறைக்க முடியும்.- போத்திலிங்கம், தனியார் ஊழியர், விருதுநகர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X