சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலத்தில் கார் மோதி ஒருவர் பலி; 9 பேர் காயம்

Added : ஜன 16, 2020
Share
Advertisement

சாத்துார்,சாத்துார்- கோவில்பட்டி நான்கு வழிச்சாலை நள்ளி விலக்கு அருகே பாலத்தில் கார் மோதியதில் ஒருவர் பலியானார்.தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சாம்பவர் வடகரைச் சேர்ந்தவர் செல்லக்கனி 62. இவர் மனைவி செல்லம்மாள் 58, மற்றும் இவர்களின் உறவினர்கள் காளிஸ்வரி, அய்யம்மாள், கணேசன், மகாலட்சுமி, கன்னிகா, விஜயகவி, புதுக்கனி வாடகை காரில் நேற்று அதிகாலை 3:30 மணிக்கு ஊரில் இருந்து கிளம்பி இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வந்தனர்.கார் காலை 4:30 மணிக்கு கோவில்பட்டி - சாத்துார் நான்கு வழிச்சாலையில் வந்தது.நள்ளி விலக்கருகே வந்த போது நான்கு வழிச்சாலையில் குறுகலாக உள்ள பாலத்தின் சுவரில் மோதியது.காரில் வந்தவர்கள் மற்றும் காரை ஓட்டி வந்த தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாண்டியாபுரத்தைச் சேர்ந்த வளையா கிருஷ்ணமுத்து படுகாயமடைந்தனர். அனைவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் புதுக்கனி என்பவர் மட்டும் மருத்துவமனைக்கு அழைத்து வரும் போது வழியிலேயே இறந்து விட்டார்.காயமடைந்த 9 பேரும் திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்டுள்ளனர்.சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X