ஐவர் புட்பால் பறந்து பறந்து

Added : ஜன 16, 2020
Advertisement
 ஐவர் புட்பால் பறந்து பறந்து

கோவை,:புலியகுளம் கால்பந்து கழகம் சார்பில், ஐவர் கால்பந்து போட்டி, புலியகுளத்தில் உள்ள, புனித அந்தோணியார் பள்ளி மைதானத்தில் துவங்கியது; நாளை நிறைவடைகிறது.

போட்டி, பொது, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் நடக்கிறது. கோவை, திருப்பூர், சென்னை, துாத்துக்குடி, சிவகாசி, திண்டுக்கல், திருச்சி, ஊட்டி, கோத்தகிரி மற்றும் கேரளாவில் உள்ள கிளப் அணிகள் பங்கேற்றுள்ளன.'நாக் - அவுட்' முறையில் பொதுப்பிரிவினருக்கான போட்டியில், 32 அணிகளும், லீக் மற்றும் நாக் -அவுட் முறையில், 17 மற்றும் 19 வயதுக்குட்பட் டோர் பிரிவில், தலா 18 அணிகளும் பங்கேற்றுள்ளன.

முதல் நாளான நேற்று தாமஸ் கிளப் மற்றும் கோவை நேரு ஸ்டேடியம் கிளப் மோதிய போட்டி, துவக்கம் முதலே பரபரப்பாக இருந்தது. இரு அணி வீரர்களும் கோல் அடிக்க மல்லுக்கட்டினர். ஆட்ட நேர இறுதி வரை, இரு அணி வீரர்களாலும், கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதையடுத்து, வெற்றியாளரை தீர்மானிக்க, 'பெனால்டி ஷூட் அவுட்' முறை பின்பற்றப்பட்டது. இதில், தாமஸ் கிளப், 3-1 என்ற கோல் கணக்கில், நேரு ஸ்டேடியம் அணியை வென்றது.

புலியகுளம் 'ஏ' அணி, சூலுார் ஸ்வீட் ராஸ்கல்ஸ் அணியை, 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. புலியகுளம் 'ஏ' அணி சார்பில், விவின், 2 கோல்களும், துாசன், பிரவீன், சுனில் தலா ஒரு கோலும் அடித்தனர்.ஜே.சி.டி., (கேரளா) அணி, போத்தனுார் நேதாஜி அணியை, 3-1 என்ற கோல்கணக்கில், வென்றது.

ஜே.சி.,டி., அணியின், ஹாசிம், அகிலேஷ் மற்றும் ரசாக் தலா, ஒரு கோல் அடித்தனர்.முன்னதாக போட்டிகளை, புனித அந்தோணியார் சர்ச் அருட்தந்தை ராயப்பன் துவக்கி வைத்தார். புலியகுளம் கால்பந்து கிளப் தலைவர் ெஹன்றிபால், துணைத்தலைவர் கனகராஜன், சதீஷ்குமார், அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X