சாயக்கழிவு நீர் நிலத்தடியில் கலப்பு: கலெக்டருக்கு புகார்: பொதுமக்கள் கலெக்டருக்கு புகார்

Added : ஜன 16, 2020
Advertisement

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே உள்ள கழுகரை பகுதியில், சாயக்கழிவுகள் நிலத்தடியில் கலப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மடத்துக்குளம் தாலுகா கழுகரை பகுதியில், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள சக்தி நகர் பகுதியில், சில வீடுகளில் சாயப்பட்டறை அமைத்து நுாலுக்கு சாயமிடும் தொழில் நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து இங்குள்ள மக்கள், திருப்பூர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள புகார் மனு: இங்கு வீடுகளுக்கு மத்தியில் சாயப்பட்டறை தொழில் நடக்கிறது. இதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தாமல், சம்பந்தப்பட்ட இடங்களிலேயே சாக்கடையில் கலக்கின்றனர். சில நேரம் தரையில் குழிதோண்டி அதில் கலக்கின்றனர்.

தரையில் தேங்கும் நீர், பல அடி தூரம் நிலத்தில் இறங்கி, நிலத்தடி நீர்மட்டத்துடன் கலந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. ரசாயனம் கலந்த இந்த சாயக்கழிவுகளால் இந்தப்பகுதியில் துர்நாற்றம், காற்று மாசு ஏற்படுகிறது. இதோடு அருகிலுள்ள ஆழ்குழாய் கிணறுகள், சாதாரண கிணறுகள் பாதிக்கும் அபாயம் உள்ளது.

விளைநிலத்துக்கு பாசனம் செய்யும் நீரில், சாயக்கழிவுகள் கலப்பதால் விவசாய நிலத்தின் மண் தன்மை குறைந்து, பயிர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X