ஊராட்சித் தலைவருக்கு வெட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊராட்சித் தலைவருக்கு வெட்டு

Added : ஜன 16, 2020

காரியாபட்டி, காரியாபட்டி அல்லாலப்பேரி ஊராட்சித் தலைவர் பிரபா. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியுற்ற சிவானந்த சரஸ்வதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். இந்நிலையில், பிரபாவுக்கு ஆதரவாக இருந்த ராமகிருஷ்ணன் நேற்று நாடக மேடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிவானந்த சரஸ்வதி ஆதரவாளர்கள் சிலர் ராமகிருஷ்ணனை கடுமையாக தாக்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு, பிரபா மற்றும் பாஸ்கரன் ஓடி வந்து தடுக்க முயன்றனர். அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, ஊராட்சித் தலைவர் பிரபாவை கன்னத்தில் வெட்டியும், தடுக்க முயன்ற அவரது தந்தை பாஸ்கரனை கையிலும் வெட்டினர். காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காரியாபட்டி போலீசில் ஊராட்சி தலைவர் பிரபா கொடுத்த புகார்படி, செந்தில்குமார், வேல்முருகன், அருவகம், ராஜமாணிக்கம், விக்னேஷ், மதியழகன், பெருமாயி, குணசேகரன், முத்துமுருகன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X