உக்ரைன் விமான விவகாரம்: புதிய 'வீடியோ' வெளியானது

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (4)
Advertisement
உக்ரைன் விமான விவகாரம்: புதிய 'வீடியோ' வெளியானது

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன்: மேற்காசிய நாடான ஈரானில் அதன் ராணுவம் செலுத்திய ஏவுகணையால் ஐரோப்பிய நாடான உக்ரைனைச் சேர்ந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் புதிய 'வீடியோ' ஆதாரம் வெளியாகி உள்ளது.ஈரானில் இருந்து உக்ரைன் சென்ற பயணியர் விமானம் சமீபத்தில் ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே விழுந்ததில் அதில் பயணம் செய்த 176 பேர் உயிரிழந்தனர்.




ஈரான் அமெரிக்கா இடையேயான மோதலில் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அப்போது தவறுதலாக உக்ரைன் விமானம் வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஈரான் ராணுவம் செலுத்திய இரண்டு ஏவுகணைகள் தாக்கி உக்ரைன் விமானம் தீப்பிடித்து வெடித்து சிதறியது தொடர்பான புதிய வீடியோ தற்போதுவெளியாகி உள்ளது.
இதை அமெரிக்க பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. அந்த விமானத்தை 30 விநாடிகள் இடைவெளியில் இரண்டு ஏவுகணைகள் தாக்குவது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. ஈரான் ராணுவ முகாமில் இருந்து சில கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் மாடியில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியிருந்தன.இந்த விமானம் வீழ்த்தப்பட்டு உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் ஈரானைச் சேர்ந்தவர்கள். அதனால் ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது நேற்றும் தொடர்ந்தது.உக்ரைன் விமானம் வீழ்த்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ஈரான் அரசு சார்பில் விசாரண நடந்து வருகின்றது. இந்த விசாரணையில் பங்கேற்கும்படி ஐ.நா.வுக்கு ஈரான் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி விசாரணையில் இணையவுள்ளதாக சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.

தேச ஒற்றுமை!
நேர்மை, ஒற்றுமை மற்றும் நம்பிக்கையுடன் தங்களை மதித்து அரசு நடந்து கொள்ள வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். உக்ரைன் விமானம் வீழ்த்தப்பட்ட விவகாரத்தில், ராணுவம் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது; நடந்தவை குறித்து விளக்கியுள்ளது.தற்போது நாட்டுக்கு தேவை தேச ஒற்றுமை.ஹாசன் ரூஹானி, ஈரான் அதிபர்


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - bangalore,இந்தியா
16-ஜன-202010:41:54 IST Report Abuse
தமிழ்வேல் இதற்க்கு நமது முஸ்லீம் மக்களின் கருத்து என்ன?
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
16-ஜன-202006:14:30 IST Report Abuse
blocked user இது போல இந்தியாவில் நடந்திருந்தால் மோடியை உடனே பதவி விலகவேண்டும் என்று எல்லாக்கட்சிகளும் கதறி இருக்கும். ஆனால் ஈரான் என்பதால் ஒரு கண்டனம் கூட கிடையாது.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஜன-202015:47:51 IST Report Abuse
தமிழ்வேல் மோடிஜி கண்டனம் தெரிவித்தாரா ? (அல்லது உங்கள் கட்சி கண்டனம் தெரிவித்ததா)...
Rate this:
Share this comment
Cancel
ana -  ( Posted via: Dinamalar Android App )
16-ஜன-202004:56:41 IST Report Abuse
ana அட பாவிகளா மறக்கிற வியாதி யாரை விட்டுச்சு இருந்து வருஷம் முன்னாடி அமெரிக்காவால் விமான விபத்தில் 273 பேர் இறந்தார்களே ஞாபகம் இருக்கா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X