பொது செய்தி

தமிழ்நாடு

தங்கம்மாள் ஓடை ரோடு அகலப்படுத்த திட்டம் : வெள்ளத்தடுப்பு சுவரும் அமைகிறது

Added : ஜன 16, 2020
Advertisement

உடுமலை:உடுமலை, தங்கம்மாள் ஓடைப்பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில், 48 லட்சம் ரூபாய் செலவில், ரோடு மற்றும் வெள்ளத்தடுப்புச்சுவர் கட்டப்பட உள்ளது.

உடுமலை நகரின் இயற்கையாக அமைந்துள்ள, மழை வெள்ளம் வடியும், தங்கம்மாள் ஓடையை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் அமைந்திருந்தன. மழைக்காலங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு வந்தன.அதோடு, பொள்ளாச்சி ரோட்டையும், தளி ரோடு, குட்டைத்திடல் பகுதியை இணைக்கும் பிரதான வழித்தடமாகவும் இருந்ததால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது.

மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், தேர் ஓடும் வீதியாகவும் உள்ளது. ரோடு குறுகலாக மாறியதால், கடும் பாதிப்பு ஏற்பட்டு வந்தது.இதற்கு தீர்வு காணும் வகையில், இரண்டு ஆண்டுக்கு முன், ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருந்தவர்களுக்கு, குடிசை மாற்று வாரியம் சார்பில், புக்குளத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

ஆனால், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில், ரோடு அமைக்கப்படாததால், மீண்டும் ஆக்கிரமிப்பு மற்றும் குப்பை கொட்டும் இடமாக மாறி, சுகாதார கேடு ஏற்பட்டு வந்தது. இரண்டு ஆண்டு இழுபறிக்கு பின், தற்போது, ரோடு அமைக்கும் பணி நடக்க உள்ளது. பொள்ளாச்சி ரோடு சந்திப்பு முதல் தலைகொண்டம்மன் கோவில் வரை, 300 மீட்டர் நீளத்திற்கு ரோடு அகலப்படுத்தும் பணியும், ஓடையின் ஒரு பகுதியில், வெள்ளத்தடுப்புச்சுவரும், 48 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது.

நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,' மத்திய நிதிக்குழு மானிய நிதியின் கீழ், தங்கம்மாள் ஓடையின் கரையில் வெள்ளத்தடுப்புச்சுவரும், ரோடு அகலப்படுத்தி, புதுப்பிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு இறுதி செய்யப்பட்டு, டெண்டர் வைக்கப் பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும்,' என்றனர்.


கான்கிரீட் ஓடையாக மாறுமா?



ஆக்கிரமிப்பு அகற்றும் போது, தங்கம்மாள் ஓடையில். கழிவு நீர் மற்றும் மழை நீர் எளிதாக ஓடும் வகையில், கழிவு நீருக்கு பேபி கால்வாயுடன், இரு கரைகளும் கான்கிரீட் கரை என, முழுமையாக கான்கிரீட் ஓடையாக மாற்ற திட்டமிடப்பட்டது. தற்போது, ரோடு அமையும் பகுதியில் மட்டும் வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. நகர பகுதியில் மட்டுமாவது, தங்கம்மாள் ஓடையை கான்கிரீட் ஓடையாக மாற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X