பொது செய்தி

தமிழ்நாடு

பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனம்: வரும் 27ம் தேதி முதல் தண்ணீர் திறப்பு

Added : ஜன 16, 2020
Advertisement
 பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனம்: வரும் 27ம் தேதி முதல் தண்ணீர் திறப்பு

உடுமலை:பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனத்திற்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, வரும், 27ம் தேதி முதல் தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.\

பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், திருப்பூர், கோவை மாவட்டங்களிலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நான்காம் மண்டல பாசனத்திற்குட்பட்ட, 94 ஆயிரத்து, 68 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்த, செப்.,25ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு பாசன காலம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. பி.ஏ.பி., முதல் மண்டல பாசனத்திற்கு, வரும், 27ம் தேதி முதல் தண்ணீர் திறப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன.

முதல் மண்டல பாசனத்திலுள்ள, 94,362 ஏக்கர் நிலங்களுக்கு, மண்டல பாசன காலத்தில், நான்கு சுற்றுக்கள் தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.பி.ஏ.பி., அதிகாரிகள் கூறுகையில், 'பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனம் நிறைவு பெற்றுள்ளது. தொகுப்பு அணைகளிலிருந்து காண்டூர் கால்வாயில் தண்ணீர் எடுப்பது நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் துவங்கியுள்ளன.

நான்காம் மண்டல பாசனம் முடிந்ததும், முதலாம் மண்டல பாசனத்திற்கு, வரும் 24ம் தேதி முதல் தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால், பொங்கல் பண்டிகை காரணமாக, கால்வாய் பராமரிப்பு பணிகள், மடைகள் மாற்றியமைத்தல், பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.அதனால், வரும் 27 ம் தேதி முதல் திறக்க, விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.


அணைநீர்மட்டம்

திருமூர்த்தி அணையில், நேற்று காலை நிலவரப்படி, நீர்மட்டம் மொத்தமுள்ள, 60 அடியில், 41.76 அடியாக இருந்தது. நீர்இருப்பு, 1,212.80 மில்லியன் கன அடியாக இருந்தது. அணைக்கு, காண்டூர் கால்வாய் வழியாக நீர்வரத்து இல்லை. பாலாற்றின் மூலம், வினாடிக்கு, 24 கனஅடி நீர்வரத்து உள்ளது.அணையிலிருந்து, 250 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.


பாதுகாப்பு அவசியம்



திருமூர்த்தி அணையில் நீர் மட்டம் குறைந்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அணையில் இறங்கி குளிக்கும் போது, சுழலில் சிக்கி பலர் பலியாவதை தடுக்கும் வகையில், கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேலியும் பல இடங்களில் உடைக்கப்பட்டுள்ளது.அதே போல், அணையின் உபரி நீர் வெளியேறும்பாலாறு மதகு மற்றும் காண்டூர் கால்வாய் பகுதியில் சுற்றுலா பயணிகள், அணைக்குள் இறங்குகின்றனர்.

நீர் தேங்கும் பகுதியிலுள்ள புதை குழிகளில் சிக்கும் அபாயம் உள்ளது. அதனால், அணைக்குள் இறங்கும் பகுதியில், முட்களை கொண்டு வேலி அமைத்துள்ளனர்.அதனையும் மீறி, பலர் இறங்குகின்றனர். எனவே, திருமூர்த்தி அணைக்குள் சுற்றுலா பயணிகள் இறங்குவதை தடுக்க, போலீசார் மற்றும் பொதுப்பணித்துறையினர் பாது காப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X