முப்பெரும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முப்பெரும் விழா

Added : ஜன 16, 2020

உடுமலை:உடுமலையில், திருவள்ளுவர் திருக்கோட்டம் சார்பில், முப்பெரும் விழா, வரும் 18ம் தேதி நடக்கிறது.

உடுமலை, அய்யலு மீனாட்சி நகரிலுள்ள திருவள்ளுவர் திருக்கோட்டம் சார்பில், வரும், 18ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, நாடார் திருமண மண்டபத்தில் முப்பெரும் விழா நடக்கிறது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில், 10, 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், தமிழ்பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல், திருக்குறள் திறனறி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு மற்றும் தமிழ்ச்சான்றோர் விருது வழங்கும் விழா நடக்கிறது.

உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேவனுார்புதுார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கல்லாபுரம் அரசு ஆரம்ப பள்ளி மற்றும் குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு திருவள்ளுவர் சிலைகள் வழங்கப்படுகின்றன. இந்நிழ்ச்சியில், சிலம்பாட்ட பயிற்சி பள்ளி, களரி பயிற்சி பள்ளி மாணவர்களின் வீரவிளையாட்டுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X