பொது செய்தி

தமிழ்நாடு

மக்காச்சோளம் அறுவடை துவக்கம் விலை சரிவால் விவசாயிகள் பாதிப்பு

Added : ஜன 16, 2020
Advertisement

உடுமலை:உடுமலை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம், அறுவடை துவங்கியுள்ளது. வரத்து அதிகரிப்பால், விலை குறைந்துள்ளது.

தமிழகத்திலுள்ள, கோழி, மாட்டுத்தீவனம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட உணவு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு, ஆண்டுக்கு, 30 லட்சம் டன் மக்காச்சோளம் தேவை உள்ளது. மகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா மாநிலங்களிலிருந்தும், தமிழக தொழிற்சாலைக்கு தேவையான மக்காச்சோளம் கொள்முதல் செய்யப்படுகிறது.

கடந்தாண்டு வட மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு மற்றும் தமிழகத்தில் படைப்புழு தாக்குதல் காரணமாக, மக்காச்சோளம் வரத்து குறைந்தது.தேவை அதிகரிப்பு, உற்பத்தி குறைவால், மக்காச்சோளத்திற்கான விலை, கடந்த, அக்., மாதத்தில், குவிண்டால், 2,800 வரை விற்றது. விலை உயர்வால், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், 60 ஆயிரம் ஏக்கர் வரை மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது, இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் அறுவடை துவங்கியுள்ளது. விலை படிப்படியாக குறைந்து, தற்போது, குவிண்டால், 1,950 ரூபாய் வரை விற்று வருகிறது.

விவசாயிகள் கூறுகையில், 'வரத்து அதிகரிக்கும் போது, விலை சரிந்து கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண, வேளாண் துறை, வேளாண் வணிகத்துறையுடன், மாவட்ட நிர்வாகம் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய நிறுவனங்கள், 'சிண்டிகேட்' அமைத்து, விலையை குறைத்து வருகின்றன,' என்றனர்.


விற்பனைக்கூட அதிகாரிகள் கூறுகையில்,



'உடுமலை பகுதி மட்டுமின்றி, விழுப்புரம், பெரம்பலுார், ஆத்துார், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், பழநி பகுதிகளிலிருந்தும் வரத்து காணப்படுகிறது. இதனால், விலை குறைந்துள்ளது. ஆனால், கோழி, மாட்டுத்தீவன உற்பத்தி நிறுவனங்களுக்கு, தினமும், 15 ஆயிரம் டன் வரை தேவை உள்ளது.மற்ற மாநிலங்களில், இனிமேல்தான், விதைப்பு பணி துவங்கும். அதனால், மக்காச்சோளம் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை.

இருப்பு வைத்து விற்றால் கூடுதல் விலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் இருப்பு வைக்கலாம்.அதற்கான பொருளீட்டுகடனும் வழங்கப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X