தமிழ்நாடு

கோலாகலம்! மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா விளையாட்டு போட்டி அமர்க்களம்

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020
Share
Advertisement
திருப்பூர்:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், விளையாட்டு போட்டிகள் நடந்தது; பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, பரிசுகளை வென்றனர்.தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகை, மாநிலம் முழுவதும் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஊரக உள்ளாட்சிகளில், மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்றதும், வரும் முதல் பண்டிகை என்பதால், கிராமப்புறங்களில், கொண்டாட்டம்
 கோலாகலம்! மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா  விளையாட்டு போட்டி அமர்க்களம்

திருப்பூர்:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், விளையாட்டு போட்டிகள் நடந்தது; பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, பரிசுகளை வென்றனர்.

தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகை, மாநிலம் முழுவதும் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஊரக உள்ளாட்சிகளில், மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்றதும், வரும் முதல் பண்டிகை என்பதால், கிராமப்புறங்களில், கொண்டாட்டம் களைகட்டியிருந்தது. கோவில் களில், அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. வேட்டி, சட்டை, புடவை, பாவாடை, தாவணி என, பாரம்பரிய ஆடைகளை அணிந்து, வழிபட்டனர்.

நகரம் மற்றும் ஊரகத்தில், வீடுதோறும், பொங்கல் வைத்து கொண்டாடினர்.வீட்டு வாசலில் கோலமிட்டு, மஞ்சள் செடியில் கங்கணம் கட்டிய மண் பானையில் பொங்கல் வைத்தனர். கரும்பு சல்லைகளை நட்டு வைத்து, சர்க்கரை பொங்கல், அரிசி முறுக்கு, கடலை, பொரி ஆகியவற்றை, தலைவாழை இலையில் படைத்து, சூரியனை வழிபட்டனர்.பொதுநல அமைப்புகள், தொழில் அமைப்புகள், இளைஞர் மன்றங்கள், நற்பணி மன்றங்கள் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், சமுதாய பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

பெரிய பானையில் பொங்கல் வைத்து வழிபட்டு, நேற்று பகல் முழுவதும் விளையாட்டு போட்டிகள் நடந்தன.ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆர்வமாக பங்கேற்று, பரிசுகளை தட்டிச்சென்றனர். வீதிகள் தோறும், மக்கள் உற்சாகத்துடன் விளையாடினர்; பிறகு கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.

* திருப்பூர், கருவம்பாளையம், மாகாளியம்மன் கோவில் அருகில், வாலிபர் சங்கம், மாதர் சங்கங்கள் சார்பில், விளையாட்டு போட்டி நடந்தது. நேற்று நடந்த, 15ம் ஆண்டு விழா போட்டியில், கோலப்போட்டியில், நுாற்றுக்கும் அதிகமான பெண்கள் பங்கேற்றனர். மாலையில்பேச்சுப்போட்டியும், நடன போட்டியும் நடந்தது.

* அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், 17ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா, வெடத்தலாங்காடு பகுதியில் நடந்தது. கொடியேற்று விழாவை தொடர்ந்து, விளையாட்டு போட்டிகள் நடந்தன. மாலையில், குழந்தைகளுக்கான கிராமிய பாடல் நிகழ்ச்சி நடந்தது. எம்.பி., சுப்பராயன், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

* பூச்சக்காடு, பகத்சிங் உடற்பயிற்சி நிலையம், ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், 19ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா நடந்தது. நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்று, விளையாட்டு போட்டிகளை நடத்தினர்.தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.போட்டியில், சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் மட்டுமல்லாது, பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

குறிப்பாக, முதியோருக்கான போட்டிகளும் நடத்தியது சுவாரஸ்மாக இருந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு, மாலையில் நடந்த விழாவில், பரிசு வழங்கப்பட்டது.மாட்டு பொங்கல் விவசாயம் மற்றும் பால் உற்பத்திக்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. கால்நடை வளர்ப்பவர்கள், பட்டி பொங்கல் வைத்து இன்று வழிபட உள்ளனர். நாளை, இளைஞர், இளம்பெண்களுக்கான காணும் பொங்கல் களைகட்டப்போகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X