பொது செய்தி

தமிழ்நாடு

ரசிகர்களின் மனதை உருக வைத்த வயலின் இசை

Added : ஜன 16, 2020
Advertisement
 ரசிகர்களின் மனதை உருக வைத்த வயலின் இசை

திருப்பூர்:திருப்பூர் ஷண்முகானந்த சங்கீத சபா சார்பில் நடக்கும் இசை அமுதத்தில், இரண்டாம் நாளில், வயலின் மெல்லிசை, ரசிகர்களை உருக வைத்தது.

ஷண்முகானந்த சங்கீத சபா சார்பில், 'இசை அமுதம் 2020' நிகழ்ச்சி, திருப்பூர், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்று திருப்பூர் வசுதேவகி செந்தில்ராஜின், 'ரிதம் இசைப்பள்ளி மாணவர்கள் வழங்கும் வளரும் கலைஞர் இசை நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, லால்குடி கிருஷ்ணன் மற்றும் விஜயலட்சுமியின் வயலின் டூயட் நிகழ்ச்சி நடந்தது.திருச்சி சங்கரன் மிருதங்கமும், திருப்புனித்துரா ராதாகிருஷ்ணன் கடம் வாசித்தனர்.

அதில், 'இன்னும் என் மனம்' என்று துவங்கும் சாருகேசி ராகத்தில் அமைந்த பதவர்ணத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. அடுத்து, 'தெலியலேது ராமா' என்ற தேனுகா ராகத்தில் அமைந்த தியாகராஜர் இயற்றிய பாடல், ரங்கப்புரவிஹாரா என்ற பிருந்தாவனசாரங்கா ராகத்தில் அமைந்த முத்துஸ்வாமி தீட்சிதர் இயற்றிய பாடல், 'சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா', என்ற கோபால கிருஷ்ணபாரதி இயற்றிய ஆபோகி ராகத்தில் அமைந்த பாடல்கள், ரசிகர்களின் மனதை உருக வைத்தது.

இசை அமுதம் ஏற்பாடுகளை ஷண்முகானந்த சங்கீத சபா தலைவர் கோதண்டபாணி, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மீனாட்சி சுந்தரம், துணை தலைவர்கள் ரத்தினம், உமாசங்கர், சீனிவாசன், துணை செயலாளர் திருமேனி, ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.நிகழ்ச்சியில் இன்று, மாப்பிள்ளை கணேஷ் குழுவினரின் 'ஆவி வந்த மாப்பிள்ளை' நகைச்சுவை நாடகம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X