பஸ் மோதி தொழிலாளி பலி பொங்கல் நாளில் சோகம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் மோதி தொழிலாளி பலி பொங்கல் நாளில் சோகம்

Added : ஜன 16, 2020
 பஸ் மோதி தொழிலாளி பலி பொங்கல் நாளில் சோகம்

பல்லடம்:பல்லடம் அருகே அசுர வேகத்தில் சென்ற பஸ் மோதி தொழிலாளி பலியானார்.

பல்லடத்தில் அடுத்த கவுண்டம்பாளையம்புதூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் 49; கட்டட தொழிலாளி. நேற்று பொங்கல் பொருட்கள் வாங்கி கொண்டு, டூவீலரில், திருப்பூர் நோக்கி சென்றார். குங்குமபாளையம் பிரிவு அருகே, அசுர வேகத்தில் பின்னால் வந்த தனியார் பஸ் மோதி, அவர் மீது ஏறியதில், சம்பவ இடத்திலேயே இறந்தார்.செல்வராஜ், ஹெல்மெட் அணிந்தபடி, ரோட்டின் இடது பக்கமாக டூவீலரில் செல்ல, கண் இமைக்கும் நேரத்தில் தனியார் பஸ் டூவீலர் மீது மோதி, தொழிலாளியின் உயிரை பறித்தது.

விபத்துக்கு காரணமாக இருந்த தனியார் பஸ் டிரைவர், கண்ணிமைக்கும் நேரத்தில் தலைமறைவானார். பொங்கல் நாளில், செல்ரவாஜ் வீட்டுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த குடும்பத்தினருக்கு, பொங்கல் நாளில், அவரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X