பொது செய்தி

தமிழ்நாடு

'நாளைக்கு பூப்பறிக்க வாங்க...!'

Added : ஜன 16, 2020
Advertisement
 'நாளைக்கு பூப்பறிக்க வாங்க...!'

பொங்கலுார்:அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பில், அலகுமலையில் நாளை 'பூப்பறிக்க வாங்க' நிகழ்ச்சி நடக்கிறது.

அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பில், நாளை பூப்பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அலகுமலை அடிவாரத்தில், சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டி, வள்ளி கும்மி ஆட்டம், மலை மீது காவடி ஆட்டத்துடன் பூப்பறிக்க செல்லுதல், பொங்கல் வைத்தல், சலங்கை ஆட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

பூப்பொங்கல் விழா குழுவினர் கூறியதாவது:கோலப் போட்டி வரும், 17ம் தேதி (நாளை) காலை, 9:15 மணிக்கு துவங்குகிறது. தகுதி சுற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, இறுதிச்சுற்று போட்டி நடக்கும். அதன்பின், சிறுவர், பெரியவர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசளிக்கப்படுகிறது.பெண்கள் குழுவாக இணைந்து கும்மி, சலங்கை மற்றும் ஒயிலாட்டம் ஆடுகின்றனர். மறந்து விட்ட தமிழ் கலாசாரத்தையும், பராம்பரியத்தையும் மீட்டெடுக்கும் வகையில், பூப்பொங்கல் விழாவை கொண்டாடுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பூப்பறிக்கும் நிகழ்ச்சி நடப்பதால், அலகுமலை முழுக்க வண்ண காகிதம், மாவிலை, வாழைக் கம்பம் என விழாக்கோலம் பூண்டுள்ளது. விழாவில், பங்கேற்குமாறு பொங்கலுார் வட்டார கிராம மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X