பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீஐயப்பன் கோவிலில் மகர சங்கரம பூஜை: பக்தர்கள் பரவசம்

Added : ஜன 16, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீஐயப்பன் கோவிலில் முதன் முறையாக, மகர சங்கரம பூஜை நேற்று நள்ளிரவில் நடந்தது.

திருப்பூர் காலேஜ்ரோடு, ஸ்ரீஐயப்பன் கோவிலில், 60 ஆண்டுகளாக, மண்டல பூஜை வழிபாடு நடந்து வருகிறது.இந்தாண்டு, வைரவிழா மண்டல பூஜைகள் விமரிசையாக நடந்து வந்தது. இதுவரை இல்லாத வகையில், மகர சங்கரம பூஜை நடத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.

ஸ்ரீஐயப்ப பக்த ஜனசங்கம், ஸ்ரீதர்மசாஸ்தா டிரஸ்ட் சார்பில், நேற்று மகர சங்கரமபூஜை சிறப்பாக நடந்தது. கோவில், வளாகம், நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்தே திறந்திருந்தது. நேற்று அதிகாலை, 2.09 மணிக்கு, சூரியன் மகர ராசிக்குள் பிரவேசமானதும், மரக சங்கரம பூஜை துவங்கியது.

பக்தர்கள் வழங்கிய நெய் கொண்டு, ஐயப்ப சுவாமிக்கு மகா அபிேஷகம் நடந்தது. பல்வேறு வழிபாடுகளை தொடர்ந்து, நேற்று மாலை, 6:30 மணிக்கு, மகர விளக்கு பூஜையும், புஷ்ப அலங்கார பூஜைகளும் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X