பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை; கோவிலில் சிறப்பு வழிபாடு

Added : ஜன 16, 2020
Advertisement
 பொங்கல் பண்டிகை; கோவிலில் சிறப்பு வழிபாடு

திருப்பூர்:தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவில்களில், பக்தர்கள் குடும்ப சகிதமாக சென்று வழிபட்டனர்.

திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவப்பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. கோவில் வளாகம் மற்றும் ஒவ்வொரு சன்னதியும், மாவிளை தோரணம் மற்றும் செங்கரும்பு வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தது.விஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப் பெருமாள், கனகவல்லி தாயார், பூமிதேவி தாயார், அனுமந்தராய சுவாமி, நவரத்தின அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

* அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடுகள், தீபாராதனை நடந்தது. அதன்பின், ரிஷப வாகனத்தில், சந்திரசேகரர், ஆனந்தவல்லி தாயாருடனும், கருட வாகனத்தில், கரிவரதராஜ பெருமாளும் எழுந்தருளி திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X