பொது செய்தி

தமிழ்நாடு

உலக நலன் வேண்டி கோமாதா பூஜை: களை கட்டிய நாட்டு மாடு கண்காட்சி

Added : ஜன 16, 2020
Advertisement
 உலக நலன் வேண்டி கோமாதா பூஜை: களை கட்டிய நாட்டு மாடு கண்காட்சி

திருப்பூர்:கே.எஸ்.கே., பவுண்டேசன், பாரதியார் குருகுலம், சார்பில் பொங்கல் திருவிழா, கொடுவாய், வஞ்சிபாளையம் பிரிவில் உள்ள தமிழ்ச்செல்வன் நினைவு அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது.

உலக நலன் கருதி கோமாதா பூஜை, 27 நட்சத்திர மஹா யாகம், நவசக்தி வேள்வியும் நடந்தது. காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமி யாகத்தை துவக்கி வைத்து, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் ஆசி வழங்கினார். கே.எஸ்.கே., பவுண்டேசன் தலைவர் சம்பத்குமார் முன்னிலை வகித்தார்.இந்து முன்னணி மாநில தலைவர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். பெண்கள் பொங்கல் வைத்தும், கும்மியாட்டம் ஆடியும் ஆராவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தமிழரின் பாரம்பரியம் போற்றும் வகையில், ஆடு, சேவல் வகை கண்காட்சி, ஆடும் குதிரைகள் மற்றும் நாட்டு மாடுகள் கண்காட்சியும் நடந்தது.ஆந்திரப்பிரேதசம், 'ஓங்கோல்', பீகார் 'பச்சோர்', லால் சிந்தி, உத்திரப்பிரதேசம், 'பொன்வார்' என அரிய மாடு வகைகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. குட்டீஸ்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அதன் அருகே, 'செல்பி' எடுத்துக்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X