பொது செய்தி

தமிழ்நாடு

களை கட்டிய பொங்கல் விழா கிராமங்களில் மக்கள் உற்சாகம்

Added : ஜன 16, 2020
Advertisement
 களை கட்டிய பொங்கல் விழா கிராமங்களில் மக்கள் உற்சாகம்

அவிநாசி:அவிநாசி சேவூர் ரோடு காமராஜ் நகரில், குடியிருப்போர் நலச்சங்கம், வெல்கம் பாய்ஸ் மற்றும் காமராஜர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், தைப்பொங்கல் திருவிழா நேற்று துவங்கியது .

ஸ்ரீ குழந்தை விநாயகர் கோவிலில், ஊர் பொதுமக்கள் சார்பில் பொங்கல் வைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. மாலை, பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, ஈரோடு கலைக்கோவில், வசந்தகுமார் குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

இன்று காலை, 7:00 மணிக்கு சமத்துவ பொங்கல், சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டு போட்டி, கோலப்போட்டி, கும்மியடித்தல் என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. அவிநாசி சேவூர் அருகே முறியாண்டாம்பாளையம் காமராஜ் நகர், மற்றும் அ.குரும்பபாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X