சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ்சில் தவறவிட்ட கைப்பை ஒப்படைத்த நடத்துனருக்கு பாராட்டு

Added : ஜன 16, 2020
Advertisement

வெள்ளகோவில்:அரசு பஸ்சில் பணத்துடன் தவற விட்ட கைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த நடத்துனரை அனைவரும் பாராட்டினர்.

திருப்பூரிலிருந்து -கரூருக்கு நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் பயணம் செய்த வினோதினி என்பவர், வெள்ளகோவிலுக்கு வந்தார். வீட்டுக்கு சென்று பார்த்த போது தனது கைப்பையை காணவில்லை. அதில், 5 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் ஏ.டி.எம்.,கார்டு இருந்தது. அதே நேரம், பஸ் நடத்துனர் ரவிச்சந்திரன், 52, என்பவர், பணப்பையை கண்டெடுத்தார். அதனுள், மருந்துச்சீட்டு இருந்தது. அதில், தொடர்புடைய கடைக்கு போன் செய்து விசாரித்தார்.

கடை உரிமையாளர் அளித்த வினோதினியின் மொபைல் எண்ணுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.அதன்படி, நேற்று காலை, 6:00 மணிக்கு வெள்ளகோவில் பஸ் ஸ்டாண்டில், நடத்துனர் ரவிச்சந்திரன், வினோதியின் சகோதரர் பிரபுவிடம், கைப்பையை ஒப்படைத்தார். இதையறிந்த, பிற நடத்துனர்கள், டிரைவர்கள், ரவிச்சந்திரனை பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X