சம்பவம் செய்தி

தமிழ்நாடு

540 கிலோ குட்கா பறிமுதல் டிரைவரை தேடும் போலீசார்

Added : ஜன 16, 2020
Advertisement
 540 கிலோ குட்கா பறிமுதல் டிரைவரை தேடும் போலீசார்

திருப்பூர்:திருப்பூருக்கு, காரில் கடத்தி வந்த, 540 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர், அனுப்பர்பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பொம்மநாயக்கன்பாளையம் பகுதியில் எஸ்.ஐ., கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரோந்து பணி சுற்றி வந்தனர். அவ்வழியாக சென்ற கார் (பதிவெண்: டிஎன்.39.பிஎக்ஸ்.6016), போலீஸ் வாகனத்தை பார்த்த உடன், வேகமாக சென்றது.

போலீசார் காரை, ஜீப்பில் துரத்தி சென்றனர். கே.எஸ்.ஆர்., நகரில் ரோட்டோரம் கார் நின்றது. போலீசார் செல்வதற்குள், டிரைவர் தப்பியோடினார். போலீசார் காரை சோதனையிட்டதில், தடை செய்யப்பட்ட குட்கா, 540 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன், இன்ஸ்பெக்டர் ராஜன் விசாரித்தனர்.காரில் கடத்தி வரப்பட்ட குட்கா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும், தப்பியோடிய டிரைவர் குறித்தும், போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X