பொது செய்தி

தமிழ்நாடு

மாணவருக்கு, 72 ஆயிரம் பஸ் பாஸ்: நடப்பு வாரத்துக்குள் வழங்க உத்தரவு

Added : ஜன 16, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் கல்வி பயிலும், 72 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு நடப்பு வார இறுதிக்குள் பஸ் பாஸ் வழங்கப்பட உள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இலவச பஸ் பாஸ் வழங்குகிறது. கல்வியாண்டு துவக்கத்தில் மாணவர்கள் தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பித்தால், மூன்று மாதத்துக்குள் பஸ்பாஸ் வழங்கப்பட்டு வந்தது.

கடந்தாண்டு வரை, இந்த நடைமுறையில் போக்குவரத்து கழகம் மாற்றம் கொண்டு வந்தது. அதன்படி, ஏப்., முதல் மார்ச் மாதம் வரை இருந்த பஸ் பாஸ் பயன்பாட்டு காலம், ஜன., முதல் டிச., மாதம் வரை மாற்றப்பட்டது. 2019 ஜன., மாதம் வழங்கிய பஸ் பாஸ் கடந்த டிச., 31ம் தேதி வரை பயன்பாட்டில் இருந்தது.

ஜன., 1 முதல் காலாவதியாகியுள்ளது. இதனால், புதிய பஸ்பாஸ் அச்சடித்து வழங்கும் பணியை போக்குவரத்து கழகம் துவக்கியுள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில். 72 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு பஸ் பாஸ் வழங்கப்பட உள்ளது. இவற்றில், 40 ஆயிரம் பஸ் பாஸ் பிரின்ட் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.மீதமுள்ள, 32 ஆயிரம் பாஸ்களை நடப்பு வார இறுதிக்குள் வழங்க போக்குவரத்து துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X