பொது செய்தி

தமிழ்நாடு

சர்க்கரை பொங்கல் கொடுத்தால்  ஆடு, மாடுகளுக்கு அமில நோய்: கால்நடைத்துறையினர் எச்சரிக்கை

Added : ஜன 16, 2020
Advertisement

திருப்பூர்:சர்க்கரை பொங்கல் அதிகம் கொடுத்தால், ஆடு, மாடுகளுக்கு, அமிலநோய் தாக்கும் அபாயம் இருப்பதால், கவனமாக இருக்க வேண்டுமென, கால்நடை பராமரிப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தை பொங்கல் பண்டிகை, தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. விவசாயித்துக்கு உதவும், விவசாயிகளின் நண்பர்களாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.கால்நடைகளை குளிப்பாட்டி, புது கயிறுகள் மாற்றி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, மூக்கணாங்கயிறு மாற்றி, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்படும்.

பட்டி பொங்கல் வைத்து, மாட்டுத்தொழுவத்திலேயே, படையலிட்டு வழிபாடு நடத்தப்படும். தொடர்ந்து, சர்க்கரை பொங்கல், கரும்பு, வாழைப்பழம் போன்றவை கால்நடைகளுக்கு பிரசாதமாக கொடுக்கப்படும். பச்சரியில் செய்த பொங்கல், சர்க்கரை பொங்கலை கொடுத்தால், அமில நோய் தாக்கும் அபாயம் இருக்கிறது.எனவே, ஆடு, மாடுகளுக்கு பொங்கல் உண்ண கொடுப்பதை தவிர்க்க வேண்டுமென, கால்நடைத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

கால்நடை அறிவியல் ஆராய்ச்சி மைய தலைவர் டாக்டர் மதிவாணன் கூறியதாவது: பொங்கலில் உள்ள, 'அசிடோஸ்' என்ற வேதி பொருளால், அதிக அளவு பொங்கல் கொடுப்பதால், அமில நோய் தாக்கும் அபாயம் உள்ளது. ஆடு, மாடுகளுக்கு, இயன்ற வரை பொங்கல் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். வழிபாடு நடத்தியற்காக, மிகவும் குறைவாக கொடுக்க வேண்டும்.

அமிலநோய் தாக்கும் மாடுகள், வயறு உப்பி, உடல்நிலை பாதிக்கும். ஆடுகளின் வயிறு உப்பினால், உயிருக்கே ஆபத்து விளைவிக்கும். எனவே, மாட்டுப்பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடி, மகிழ வேண்டும்; கால்நடைகளுக்கு, பொங்கல் உண்ண கொடுக்கக்கூடாது.ஆடு, மாடுகளுக்கு அமிலநோய் தாக்கினால், சமையல் சோடா, 30 கிராம் அளவு தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். இதனால், தற்காலிக தீர்வு கிடைக்கும்; பிறகு, அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை, கிளை நிலையங்களுக்கு அழைத்துச்சென்று சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X