மகளிர் இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் காலி

Added : ஜன 16, 2020
Advertisement

கூடலுார்:கூடலுார், தேவாலா மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில் காலியாக உள்ள மகளிர் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி உள்ளனர்.

கூடலுார், தேவாலி சப்--டிவிஷன்களில் தலா ஐந்து போலீஸ் ஸ்டேஷன்கள்; தலா ஒரு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் செயல் பட்டு வருகிறது.இரு சப்--டிவிஷனில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளில்,'பெண்களுக்கு ஏற்படும் குடும்ப பிரச்னைகள் தொடர்பாக விசாரணை செய்து, கவுன்சிலிங் கொடுப்பது; பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை தொடர்பான புகார்கள் மீது விசாரணை செய்து, குற்றவாளி 'போக்சோ' சட்டத்தில் கைது செய்வது,' உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், இந்த இரு மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களிலும் இரண்டு ஆண்டுகளாக இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது.எம்.பி., தேர்தலின்போது இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப் பட்டது. தேர்தல் முடிந்த பின் அவர்கள் மாற்றலாகி சென்றனர்.தொடர்ந்து, இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால், முக்கிய வழக்குகளின், விசாரணைக்கு, ஊட்டியிலிருந்து மகளிர் இன்ஸ்பெக்டர் வரவேண்டியுள்ளது. இதனால், விசாரணை பணிகளில் தாமதம்
ஏற்படுகிறது.

கடந்த ஆண்டு கூடலுார், தேவாலா சப்--டிவிஷன்களில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக பலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். நிரந்தர இன்ஸ்பெக்டர்கள் இல்லாத தால், பல வழக்குகளை உடனடியாக விசாரணை செய்து, குற்றவாளிகள் கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது.சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,'கிராம பகுதிகள் நிறைந்த இப்பகுதிகளின் முக்கியதுவத்தை கருத்தில் கொண்டு, காலியாக உள்ள, மகளிர் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X