பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் கல்லுாரியில் பொங்கல் விழா

Added : ஜன 16, 2020
Advertisement
 மகளிர் கல்லுாரியில் பொங்கல் விழா

குன்னுார்:குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரியில், ஜாதி மத பேதமின்றி, பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரியில், மாணவியர் சார்பில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.

விழாவில், இயற்கை பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, பாரம்பரிய கலாசார உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கோலமிட்டு விழிப்புணர்வைஏற்படுத்தியதுடன், குழுக்களாக சேர்ந்துபொங்கல் வைத்து போட்டிகள் நடத்தப்பட்டது.இதில் பாரம்பரிய தப்பாட்டத்தில், மாணவியர் குழுவாக நடனமாடினர். முன் னதாக, போட்டியை கல்லுாரி முதல்வர் டாக்டர் ஷீலா துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, நடுவர்களாக பங்கேற்ற பேராசிரியைகள் குணசீலி, அமுதா, விசாலாட்சி, தீபா சிறந்த கோலம் மற்றும் பொங்கல் தேர்வு செய்தனர். மாணவியரின், தமிழக பாரம்பரிய கலாசாரமான நாட்டுப்புற பாட்டு, வில்லுப்பாட்டு, கரகம், பரத நாட்டியம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது. மாணவியருக்கு பொங்கல் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கல்லுாரி தலைவர் அப்ரின், துணைத் தலைவர் ஷெரின், செயலா ளர் சாருதி, துணை செயலாளர் சுவாதி செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X