பொது செய்தி

தமிழ்நாடு

'ரிவால்டா' யானை அணுகினால் 'சோதனை'

Added : ஜன 16, 2020
Advertisement

கூடலுார்:'மசினகுடி சுற்றுப்புறங்களில் உலாவரும் 'ரிவால்டா' என்றழைக்கப்படும் காட்டு யானை அருகே செல்ல வேண்டாம்,' என, வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

முதுமலை புலிகள் காப்பகம், வெளிவட்ட பகுதி துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:மசினகுடி, மாவனல்லா, வாழைத்தோட்டம், சீகூர் பகுதிகளில், நடமாடி வரும் ஒற்றை காட்டு யானயினால், பொதுமக்களுக்கு இதுவரை, இடையூறு ஏற்படவில்லை. மக்களிடம் நன்றாக பழகும் யானையை அப்பகுதியினர் 'ரிவால்டா' என பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.

சாலையோரங்களில் தென்படும் யானையின் அருகே, உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் சென்று உணவு அளிப்பது; புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். யானை பார்ப்பதற்கு சாதுவாக தோன்றினாலும், அது காட்டு யானை என்பதால், எந்த நேரத்திலும் கோபமுற்று உயிர் சேதம், பொருட்கள் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

எனவே, பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அருகே சென்று, உணவு கொடுக்கவோ, படம் எடுக்கவோ கூடாது. குடியிருப்புக்கு அருகே வரும் பட்சத்தில் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X