வாகனம் நிறுத்த வசதியில்லை மக்களுக்குத்தான் தொல்லை

Added : ஜன 16, 2020
Advertisement

கோத்தகிரி:கோத்தகிரி நகரில் வாகனங்களை நிறுத்த வசதி இல்லாததால், மக்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

நீலகிரியில், சிறப்புநிலை அந்தஸ்து பெற்ற கோத்தகிரி பேரூராட்சியில், 40 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.இப்பேரூராட்சி,மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப,தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர வாய்ப்புள்ளது.கோத்தகிரி பஸ் நிலையம், காமராஜர் சதுக்கம், ராம்சந்த் மற்றும் டானிங்டன் ஆகிய பஜாரை தவிர்த்து, முழுக்க கிராமங்களில்தான் மக்கள் தொகை மிகுதியாக உள்ளது.

குறைந்த நிலப்பரப்பு கொண்ட நகர பகுதியில்,'பார்க்கிங்' உட்பட, கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைவு. அதேநேரத்தில், வாகனங்களில் இயக்கம் அதிகம். ஆனால், 'பார்க்கிங்' வசதி மிக, மிக குறைவு. இதனால், நகரப்பகுதியில் முறைதவறி நிறுத்தப்படும் வாகனங்களால், நெரிசல் தொடர்கிறது. முக்கியமான இடங்களில் 'பேரிகார்டு' அமைத்து, வாகனங்களை முறையாக நிறுத்தினாலும், போக்குவரத்து போலீசாரால், முடியாத ஒன்றாக உள்ளது.

கோடை விழா உள்ளிட்ட முக்கியமான நாட்களில், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், ஒருவழி பாதையாக மாற்றப்படுவதாலும், நகர சாலையில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

கோத்தகிரி பஸ் நிலையத்தை ஒட்டி, பேரூராட்சி அலுவலகம் வரை, காலியாக உள்ள இடங்களை சமன்செய்து, தளம் அமைத்து மினிபஸ் நிறுத்தமாக மாற்றினால், வாகன நெரிசல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X