சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கர்ப்பிணி அலைக்கழிப்பு: கலெக்டரிடம் மனு

Added : ஜன 16, 2020
Advertisement

பந்தலுார்:'பந்தலுார் கர்ப்பிணியை அலைக்கழித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

பந்தலுார் அருகே, அத்திக்குன்னா பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மனைவி மோனிஷா,22. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் காலை வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனியார் வாகனத்தில், பந்தலூர் அரசு மருத்துவமனை கொண்டு வந்துள்ளனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கூடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த செவிலியர்கள் சில மணி நேரம் அங்கேயே வைத்திருந்து, 'பின்னர் யாரும் இல்லை,' என, கூறி ஊட்டி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். மருத்துவமனை கொண்டு செல்ல, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரை மணி நேரம் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வராததால், உறவினர்கள் அவரை மீண்டும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கேரள மாநிலம் சுல்தான் பத்தேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கர்ப்பிணியை மருத்துவ குழுக்கள் அலைக்கழித்த சம்பவம் குறித்து, மாவட்ட கலெக்டருக்கு பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.அவர்கள் கூறுகையில், 'இது குறித்து விசாரணை நடத்தி, கர்ப்பிணியை அலைக்கழித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X