பொது செய்தி

தமிழ்நாடு

சத்தான உணவு அவசியம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

Added : ஜன 16, 2020
Advertisement

கூடலுார்:கூடலுார் அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், பழங்குடி மாணவர்களுக்கான உண்டு உறைவிட பள்ளியில், பழங்குடி மாணவர்களுக்கான, நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமி தலைமை வகித்தார்.கூடலுார் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையத்தின் செயலாளர் சிவசுப்ரமணியம் பேசுகையில்,''மாணவர்கள் தரமான பொருட்களை பயன்படுத்துவதை அறிந்திருக்க வேண்டியது மிக அவசியம். எப்.பி.ஓ., முத்திரை, உணவு பாதுகாப்பு துறை சான்று உள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

மாணவர்கள் உணவில் அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவதன் மூலம், உடல் சார்ந்த பல பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சத்தான உணவை எடுத்து கொள்வதன் மூலம் நலமாக வாழ முடியும்,'' என, கூறினார்.நிகழ்ச்சியில், ஆசிரியர் வேளாங்கண்ணி, பழங்குடி மாணவர்கள் பங்கேற்றனர் ஆசிரியை லட்சுமிதேவி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X