பொது செய்தி

தமிழ்நாடு

பேரூராட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா

Added : ஜன 16, 2020
Advertisement

கூடலுார்:முதுமலை புலிகள் காப்பகம், கூவகொல்லி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் சார்பில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு போலீசார் சார்பில் இனிப்பு, நாள்காட்டி காலண்டர்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மசினகுடி தனி பிரிவு எஸ்.எஸ்.ஐ., விஜயன், தலைமை காவலர் மகேஷ், நக்சல் தடுப்பு பிரிவு காவலர் கிருஷ்ணகுமார் பெற்றோர் மாணவர்கள் பங்கேற்றனர்.

* ஓவேலி பேரூராட்சி சார்பில், பார்வுட் நகரில் புகையில்லாத பொங்கல் விழா நடந்தது. செயல் அலுவலர் நாகராஜன் தலைமை வகித்தார். புகையினால் சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுப்பது குறித்து, விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து மாணவர்களிடையே கோல போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள். வழங்கப்பட்டன. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. பேரூராட்சி எழுத்தாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X