பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரி பழங்குடியின மக்கள் வாழ்வாதாரத்துக்கு ஊக்குவிப்பு: காபி தூள் விற்பனை துவக்கம்

Added : ஜன 16, 2020
Advertisement

ஊட்டி:ஊட்டியில், பழங்குடியினர் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க காபி துாள் விற்பனை துவக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனையின்படி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தோட்டக்கலைத்துறை இணைந்து, நீலகிரியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் நலனுக்காக, அவர்கள் வசிக்கும் இடத்தில், மகளிர் சுய உதவி குழு உருவாக்கி, அப்பகுதியில் காபி சாகுபடி செய்ய ஊக்குவிப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து, மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்த காபி கொட்டையை தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்று வந்தனர்.இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தோட்டக்கலை துறை இணைந்து, தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் பழங்குடியினர், காபியை நல்ல விலைக்கு கொள்முதல் செய்து, 'நீல்கா பே' என்ற பெயரில், நீலகிரியிலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக, ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, காபிதுாளை அறிமுகப்படுத்தினார்.இந்த காபித்துாள், அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா மற்றும் இதர விற்பனை நிலையங்களில், 130 ரூபாய்க்கு 200 கிராம் கிடைக்கும்.நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்; இணை இயக்குனர் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X