பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை கல்லுாரியில் பழங்குடி மாணவர்கள்

Added : ஜன 16, 2020
Advertisement
 சென்னை கல்லுாரியில் பழங்குடி மாணவர்கள்

பந்தலுார்:பந்தலுார் சோலாடி பழங்குடியின கிராமத்தின் இரு மாணவர்கள், சென்னையில் படிக்க, தன்னார்வ தொண்டு நிறுவனம் உதவி உள்ளது.

கூடலுார், பந்தலுார் பகுதிகளில் வனங்களிலும்,வனத்தை ஒட்டிய பகுதிகளிலும் காட்டுநாயக்கர் மற்றும் பனியர் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள், கல்வியிலும், பொருளாதாரத் திலும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இவர்களில் பனியர் சமுதாயத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியால், சென்னை லயோலா கல்லுாரியில் படிக்கும் அளவு உயர்ந்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதன் விபரம்:பந்தலுார் அருகே, சோலாடி பழங்குடியின கிராமத்தை சேர்ந்த சுரேஷ். கூடலுார் பாரதியார் கலை கல்லுாரியில் இளநிலை பட்ட படிப்பும் முடித்துள்ளார்.தொடர்ந்து,
நீலகிரி-வயநாடு ஆதிவாசிகள் நலச்சங்கத்தின் மேலாளர் ரொனால்டு முயற்சியால், சென்னை லயோலா கல்லுாரியில் எம்.ஏ. சோசியாலஜி படித்து வருகிறார்.

இதேபோல, வெள்ளேரி பழங்குடியின கிராமத்தை சேர்ந்த சசி. பாட்டவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைக்கல்வியும் நிறைவு செய்த இவர், இதே,தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், சென்னை லயோலா கல்லுாரியில் பி.ஏ., சோசியாலஜி படித்து வருகிறார்.அதில், சுரேஷ் கல்விக்காக, விரைவில் பின்லாந்து நாட்டிற்கு செல்ல, கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் மூலம் விமானத்தில் பறக்கும் முதல் பனியர் சமுதாய மாணவர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. முதன்முறையாக, இந்த மாணவர்கள் சென்னையில் படிக்க உதவிய, ஆதிவாசி சங்கத்துக்கு, பனியர் பழங்குடி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X