தமிழ்நாடு

தள்ளாடும் இளம் தலைமுறை!போதைக்கு அடிமையாகும் அவலம் :செய்வதறியாது தவிக்கும் பெற்றோர்

Added : ஜன 16, 2020
Advertisement

ஊட்டி:நீலகிரியில் சமீப காலமாக, மது போதைக்கு இளைஞர்கள் அடிமையாகி வருவதும், போதை தலைக்கு ஏறி, தெருவில் உயிரை விடுவதும் அதிகரித்து வருகிறது.

மாநில அளவில், டாஸ்மாக் மது விற்பனையில், நீலகிரி மூன்றாம் இடத்தில் இருப்பதாக, புள்ளி விபரம் தெரிவிக்கிறது. இங்குள்ள, மது கடைகள் மூலம் தினசரி, சராசரி விற்பனை, 1.50 கோடி ரூபாய். கோடை சீசன் மற்றும் விழா நாட்களில் விற்பனை, இரு மடங்காகிறது.மாவட்டம் முழுவதும், 20 வயது முதல், 35 வயதுள்ள இளைஞர்கள், 60 சதவீதம் பேர்; 45 வயது வரை, 40 சதவீதம் பேரும் குடிக்கு அடிமையாகி இருப்பது, சமீபத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆய்வில், தெரியவந்துள்ளது.

நாள்தோறும், காலையில் வேலைக்கு செல்லும் முன்பே, ஏராளமான தொழிலாளர்கள், இளைஞர்கள், கிராமப்புறங்களில் 'பிளாக்கில்' விற்கும் மது வகைகளை குடித்து விட்டு பணிக்கு செல்லும் நிலை அதிகரித்துள்ளது. 12:00 மணிக்கு மது கடை திறக்கும் வரை அவர்களால் காத்து நிற்க முடியவில்லை.கடந்த ஆண்டில், 45 பேர்இந்நிலையில், கடந்த, இரண்டு ஆண்டில், மாவட்டம் முழுவதும், 35 வயதுள்ள இளைஞர்கள்,45 பேர் குடிக்கு அடிமையாகி, அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இன்னும், பல்லாயிரம் பேர், நோயால் பாதிக்கப்பட்டு, வீட்டுக்கும்; நாட்டுக்கும் பயனில்லாமல், முடங்கி கிடக்கின்றனர்.


வீதியில் மரணம்



ஊட்டி நகரில் கடந்த, 6 மாதங்களில் குடி போதை உச்சத்தால், வீதியில் விழுந்து, இரவில் குளிருக்கு பலர் இறந்தனர். இதில், 'ஊட்டி ஏ.டி.சி., பஸ் ஸ்டாப்பில், இத்தலார் பகுதியை சேர்ந்த, 40 வயது ஆண்; ஊட்டி மெயின் பஜார் சாலையில், 35 வயது வாலிபர்; சேரிங்கிராஸ் பஸ் ஸ்டாப்பில் கோத்தகிரி பகுதியை சேர்ந்த வாலிபர்; பிங்கர் போஸ்டில் ஒரு வாலிபர், நேற்று முன்தினம் சாந்தி விஜய் பெண்கள் பள்ளி அருகே கால்வாயில் விழுந்த வாலிபர்,' என, மாவட்டம் முழுவதும், இன்னும் பலர் போதையின் உச்சம் அளவை மீறியதால் இறந்தனர் என்பது, போலீசார் புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.


'செல்ப் கன்ட்ரோல்' அவசியம்...

நீலகிரியில், பெண்கள் சார்பில், மாவட்ட நிர்வாகத்துக்கு வந்த, கண்ணீர் மனுக்களின் அடிப் படையில், 'குடி' யால் நிம்மதியிழந்தவர்களுக்கு, தேவையான மருத்துவ உதவி மற்றும் 'கவுன்சிலிங்' அளிக்க, மாவட்ட கலெக்டர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனர். ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் பழனிசாமி கூறுகையில்,''குடி பழக்கத்திலிருந்து விடுபட அரசு மருத்துவமனையில், மன நல மருத்துவர் உதவியுடன் கவுன்சிலிங் மற்றும் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தேவைப்படுபவர்களை சம்மந்தப்பட்ட குடும்பத்தினர் அழைத்து வரலாம். இது ஒருபுறம் இருக்க, குடி பழக்கத்திற்கு அடிமையானவர்கள் நிரந்தரமாக விடுபட முதலில் 'செல்ப் கன்ரோல்' தேவை. இல்லையெனில், அவரின் குடும்பம்; குழந்தைகள் பாதிக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X