பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் குழுவுக்கு ரூ.1.5 கோடி கடன் உதவி

Added : ஜன 16, 2020
Share
Advertisement

ஊட்டி:நீலகிரி மகளிர் திட்டம் மூலம் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 1.5 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

ஊட்டியில் செயல்பட்டு வரும் மகளிர் திட்டம் மூலம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுய தொழில் தேவைக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் உள்ள மகளிர் குழுவினர் சுய தொழிலுக்கு போதிய அக்கறை காட்டுவதில்லை. இதனால் இவர்களுக்காக ஒதுக்கப்படும் நிதி குறிப்பிட்ட காலகட்டத்தில் பயன்படுத்த முடியாததால் திருப்பி அனுப்பப்படுகிறது.

இதனால், தற்போது, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுய தொழிலுக்கான போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக சமீபகாலமாக மகளிர் திட்டங்களில் உள்ள சுய தொழில்களை பயன்படுத்த மகளிர் குழுவினர் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், மகளிர் திட்டத்தின் சார்பில், 11 மகளிர் குழுவினர் சுய தொழில் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. சம்பந்தப்பட்ட மகளிர் குழுவினருக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யாகடனுதவி வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X