மார்க்கெட்டில்சமத்துவ பொங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மார்க்கெட்டில்சமத்துவ பொங்கல்

Added : ஜன 16, 2020

ஊட்டி:ஊட்டி மார்க்கெட்டில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.ஊட்டி மார்க்கெட்டில், நீலகிரி மாவட்டம் மதநல்லிணக்க அமைதிக் குழு சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப் பட்டது.

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட எஸ்.பி., சசிமோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கேற்றி சமத்துவ பொங்கல் துவக்கி வைத்தனர்.நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் கவுரவிக்கப்பட்டனர். நீலகிரி மதநல்லிணக்க அமைதிக் குழு தலைவர் முகமது அலி மற்றும் அமைதி குழுவை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X